Page Loader
இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை
இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I

இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 09, 2023
01:46 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், தொடரை கைப்பற்றுவதை தக்கவைக்க ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தை பொறுத்தவரை இங்குள்ள டிராக் பெரிய ஸ்கோர்களுக்கு பெயர் பெற்றது மற்றும் பேட்டர்களுக்கு எப்போதும் சாதகமாகவே அமைந்துள்ளது. எனினும், புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சில சாதகங்களும் உள்ளன. முன்னர் நடந்த முதல் போட்டியிலும், பேட்டர்களை கட்டுப்படுத்த பந்துவீச்சாளர்கள் சிறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

India vs England Women's Cricket 2nd T20I Pitch and Weather reaport

போட்டிக்கு மழையால் பாதிப்பா?

போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்யூவெதரின் கூற்றுப்படி, ஓரளவு மேகமூட்டமான நாளாக இருக்கும் என்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிலைமைகள் உதவும். வெப்பநிலை 24-33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் ஈரப்பதம் அளவு 60% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விளையாட்டின் கடைசி கட்டங்களில் பனி ஒரு பங்கை வகிக்க முடியும். இங்கு விளையாடிய 181 டி20 போட்டிகளில் (சூப்பர் ஓவர் ஆட்டங்கள் தவிர்த்து) சேஸிங் அணிகள் 105ல் வெற்றி பெற்றுள்ளன. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் சராசரி ரன் விகிதம் 8.3 ஆகும்.

India vs England Women's Cricket 2nd T20I Expected XI

எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் XI) : ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா தாக்கூர் சிங், சைகா இஷாக். இங்கிலாந்து கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் XI) : டேனியல் வியாட், சோபியா டன்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், லாரன் பெல், மஹிகா கவுர்.