INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சம நிலையில் உள்ளது.
இரு அணிகளுமே மூன்றாவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி புள்ளி விபரங்கள்
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை மொத்தம் 145 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் ஆஸ்திரேலியா 81 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்தியா 54 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 10 ஒருநாள் போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 2019க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் தொடரை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெறும்.
2019 இல் இந்தியாவை 3-2 என்ற கணக்கில் கடைசியாக வீழ்த்தியதும் ஆஸ்திரேலியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.