LOADING...
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! உள்ளே வந்த விராட் கோலி, பும்ரா! அதிர்ஷ்டம் இல்லாத ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! உள்ளே வந்த விராட் கோலி, பும்ரா! அதிர்ஷ்டம் இல்லாத ஜெய்ஸ்வால்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
04:08 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியில் மூத்த நட்சத்திர பேட்டர் விராட் கோலி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய இளம் இடதுகை பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை.

விராட் கோலி

விராட் கோலியின் உடற்தகுதி மற்றும் மருத்துவக் குழுவின் அனுமதி

ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது விராட் கோலிக்கு தொடை நாரில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் அவர், பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வுக்கு ஆஜராகவுள்ளார். அங்கு மருத்துவக் குழு வழங்கும் உடற்தகுதி சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சதம் அடித்தும் அணியில் இடம் கிடைக்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால்

முன்னதாக ஆப்கானிஸ்தான் தொடரில் விராட் கோலிக்கு மாற்றாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இருப்பினும், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் அணிக்குத் திரும்புவதால், ஆப்கானிஸ்தான் தொடரை 3-0 என வென்ற இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் ஜெய்ஸ்வால் மட்டும் துரதிர்ஷ்டவசமாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஜஸ்ப்ரீத் பும்ரா

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்பு அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான அணியில் அவர் பெயரிடப்பட்டிருந்தாலும், முதுகு வலி காரணமாக விலகினார். வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவரது பணிச்சுமையை மேலாண்மை செய்யவே அண்மைய தொடர்களில் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

Advertisement

வருண் சக்கரவர்த்தி

அயர்லாந்து டி20 தொடரிலிருந்து வருண் சக்கரவர்த்தி விலகல்

மறுபுறம், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ஐபிஎல் 2026 தொடரின் போது அவரது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, தற்போது பிசிசிஐ அகாடமியில் இறுதி கட்ட மறுவாழ்வுப் பயிற்சியில் உள்ளார். அவர் அயர்லாந்து தொடரைத் தவறவிட்டாலும், அதன் பின்னர் நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டி20 இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி

அணி வீரர்களின் பட்டியல்

இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார். *உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டது அயர்லாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி (புதுப்பிக்கப்பட்டது): ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.

Advertisement