LOADING...
வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!
நிதி நெருக்கடி குறித்து மனம் திறந்து பேசிய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்

வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2023
02:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஏடிபி சுற்றுப்பயணத்தை தொடர ரூ.1 கொடிக்கான பட்ஜெட்டை தயார் செய்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார். அவர் ஜெர்மனியில் உள்ள நான்செல் டென்னிஸ் அகாடமியில் சில ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் நிதிப் பற்றாக்குறையால் 2023 சீசனின் முதல் மூன்று மாதங்களில் அவருக்குப் பிடித்த இடத்தில் பயிற்சி பெற முடியவில்லை. நிதிநெருக்கடியின்போது அவரது நண்பர்கள் சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் கிறிஸ்டோபர் மார்கிஸ் ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர் ஜெர்மனியில் தங்குவதற்கு உதவியுள்ளார்கள்.

Sumit Nagal faces financial instability

நிதி நெருக்கடி குறித்து மனம் திறந்து பேசிய சுமித் நாகல்

நிதி நெருக்கடி என்பது அநேகமாக ஒவ்வொரு இந்திய டென்னிஸ் வீரரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் நம்பர் ஒன் ஒற்றையர் வீரரான சுமித் நாகல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் போதுமான பணத்தைச் சேமிக்கவில்லை என்பது இந்திய டென்னிஸ் கட்டமைப்பில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகிறது. அவருக்கு ஐஓசிஎல் மூலம் மாதாந்திர சம்பளம் மற்றும் மகா டென்னிஸ் அறக்கட்டளை நிதியுதவி கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை என நாகல் தெரிவித்துள்ளார். தான் போட்டிகளில் பெறும் பரிசுத்தொகை முழுவதையும் பயிற்சிக்காகவே மீண்டும் செலவிடுவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், அரசு டென்னிஸ் வீரர்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.