
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பகுப்பாய்வு பயிற்சியாளராக ரெட் ஹல்கெட் நியமனம்
செய்தி முன்னோட்டம்
புதிய ஆடவர் தலைமைப் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க வாய்ப்புள்ள நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் ரெட் ஹல்கெட் மற்றும் ஆலன் டான் ஆகியோர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹல்கெட் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டான் அணியின் அறிவியல் ஆலோசகராக செயல்பட உள்ளார்.
சுவாரஸ்யமாக ஹல்கெட் 2010 இல் தனது முதல் சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாட இந்தியாவிற்கு வந்த நிலையில் தற்போது பகுப்பாய்வு பயிற்சியாளராக வருகிறார்.
மேலும் 2020 முதல் நெதர்லாந்து மகளிர் மற்றும் ஸ்காட்லாந்து யு-21 அணிகளில் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில், டான், டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் மூத்த வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
பகுப்பாய்வு பயிற்சியாளராக ரெட் ஹல்கெட் நியமனம்
#Hockey India announced that #RhettHalkett and #AlanTan will join the support staff of the Indian men's hockey team in their new roles as analytical coach and scientific advisor respectively. pic.twitter.com/0C6YYXgi1o
— IANS (@ians_india) April 7, 2023