Loading...
உலகக் கோப்பை ரோயிங்கில் இந்தியா பெற்ற வரலாற்று தங்கப் பதக்கம் பறிமுதல்: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர் லக்‌ஷய்
உலகக் கோப்பை ரோயிங்கில் இந்தியா பெற்ற வரலாற்று தங்கப் பதக்கம் பறிமுதல்

உலகக் கோப்பை ரோயிங்கில் இந்தியா பெற்ற வரலாற்று தங்கப் பதக்கம் பறிமுதல்: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர் லக்‌ஷய்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
08:33 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோயிங் போட்டியில், லைட்வெயிட் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா தனது முதல் வரலாற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இருப்பினும், அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய ராணுவ வீரர் லக்‌ஷய் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, இந்தியா வென்ற அந்தத் தங்கப் பதக்கம் தற்போது அதிகாரப்பூர்வமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டானோசோலோல்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஸ்டானோசோலோல்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) நடத்திய சோதனையில், லக்‌ஷய்யின் மாதிரி பரிசோதிக்கப்பட்ட போது அதில் ஸ்டானோசோலோல் என்ற தடைசெய்யப்பட்ட உடல்திறனை அதிகரிக்கும் ஸ்டீராய்டு மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 25 அன்று புனேவில் உள்ள ஆர்மி ரோயிங் சென்டரில் போட்டிக்கு பிந்தைய சோதனையின் போது எடுக்கப்பட்ட மாதிரியிலேயே இந்த மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் தடை

NADA இடைக்காலத் தடை மற்றும் 4 ஆண்டுகள் தடை அபாயம்

சோதனை முடிவுகள் சாதகமாக இல்லாததைத் தொடர்ந்து, லக்‌ஷய்க்கு NADA அமைப்பு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 25க்குப் பிறகு லக்‌ஷய் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உஜ்வல் குமார் சிங் மற்றும் லக்‌ஷய் இணை வென்ற உலகக் கோப்பை தங்கப் பதக்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் லக்‌ஷய்க்கு 4 ஆண்டுகள் வரை போட்டித் தடை விதிக்கப்படலாம்.

ADVERTISEMENT

ஆசிய போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாகப் பெரும் பின்னடைவு

வரும் செப்டம்பர் 19 முதல் ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் தொடங்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தரும் மிக முக்கியமான இணையாகப் பார்க்கப்பட்ட லக்‌ஷய் - உஜ்வல் கூட்டணி, தற்போது இந்த ஊக்கமருந்து விவகாரத்தால் போட்டியிட முடியாமல் போயுள்ளது.

இது இந்திய விளையாட்டுத்துறை மற்றும் ரோயிங் கூட்டமைப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT