
INDvsENG 2வது டெஸ்ட்: 587 ரன்கள் குவித்து பாகிஸ்தானின் சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை குவித்தது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி எடுத்த உச்சபட்ச ஸ்கோராக சாதனை படைத்துள்ளது. போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து இந்தியாவின் இன்னிங்ஸை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தில் ஒரு இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பெற்றார். ஷுப்மன் கில்லின் இன்னிங்ஸ், பாஸ்பால் சகாப்தத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 579 ரன்களை இந்தியா முறியடிக்க உதவியது.
பாகிஸ்தான்
2023இல் 579 ரன்கள் குவித்தும் தோற்ற பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2022 டிசம்பரில் ராவல்பிண்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 579 ரன்கள் என்ற தனது சாதனையை படைத்தது. ஆனால் இங்கிலாந்தின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இறுதியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 587 ரன்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஸ்கோராகும். முன்னதாக, கடந்த ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 487 ரன்களை விட அதிகமாகும். அந்த பெர்த் டெஸ்ட், விராட் கோலியின் கடைசி டெஸ்ட் சதத்தோடு, 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியின் அபார வெற்றியையும் குறிக்கும் வகையில் அமைந்தது.