Page Loader
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் விளையாடும் லெவனில் இடம் பெறாத 5 வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் விளையாடும் லெவனில் இடம் பெறாத 5 வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் விளையாடும் லெவனில் இடம் பெறாத 5 வீரர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2023
06:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா டி20 தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்களை இதில் பார்க்கலாம். நவ்தீப் சைனி (டெஸ்ட்): வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் 30 வயதான நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டதே பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ஏற்கனவே முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர் மற்றும் முகேஷ் குமார் என பலரும் இருந்ததால் கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

ruturaj gaikwad omitted in test

ருதுராஜ் கெய்க்வாட் (டெஸ்ட்)

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடினாலும், டெஸ்ட் போட்டியில் கடைசி வரை களமிறக்கப்படவில்லை. யுஸ்வேந்திர சாஹல் (ஒருநாள்): டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலும் யுஸ்வேந்திர சாஹல் விளையாடியிருந்தாலும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித், கோலி ஆகியோரைப் போல ஓய்வு கொடுக்கப்பட்டார். அவேஷ் கான்(டி20): அவேஷ் கான் கடைசியாக 2022 ஆசிய கோப்பையில் விளையாடினார். அதன்பிறகு, தற்போது வாய்ப்பு கிடைத்தும் விளையாடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. உம்ரான் மாலிக் (டி20): ஐபிஎல் மூலம் கவனம் ஈர்த்த உம்ரான் மாலிக்கிற்கு, துரதிர்ஷ்டவசமாக, இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி விக்கெட் எதுவும் எடுக்காத நிலையில், டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.