INDvsSA 3வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினம் பிட்ச் யாருக்கு சாதகம்? ரிப்போர்ட் சொல்வது இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 6) விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அபாரமான ரன் சேசிங் மூலம் பதிலடி கொடுத்து, தொடரை 1-1 எனச் சமன் செய்தது. எனவே, இந்த இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
விசாகப்பட்டினம் பிட்ச் ரிப்போர்ட்: பனிப்பொழிவுதான் முக்கியம்
விசாகப்பட்டினம் மைதானத்தைப் பொறுத்தவரை, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அதிக ரன்கள் குவிக்கப்படும் ஒரு த்ரில்லர் ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில், பனிப்பொழிவு (Dew) மீண்டும் ஒரு முக்கியப் பேசுபொருளாக இருக்கும். எனவே, இங்கு நடக்கும் ஆட்டங்களில் டாஸ் வெல்லும் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, முதலில் பந்துவீசவே முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரை வெல்ல இரு அணிகளும் முழுத் திறமையைக் வெளிப்படுத்த முயற்சிக்கும். ஏற்கெனவே நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்த நிலையில், ஒருநாள் தொடரிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்கா இருந்தாலும், தொடரை வெல்ல இந்தியா கடுமையாக போராடும்.