Page Loader
IND vs NED : 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா
IND vs NED : ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா

IND vs NED : 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா

எழுதியவர் Nivetha P
Nov 12, 2023
09:43 pm

செய்தி முன்னோட்டம்

2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இதனிடையே இன்று(நவ.,12) இத்தொடரின் கடைசி லீக் போட்டி இந்தியா-நெதர்லாந்து இடையே நடந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 410 ரன்களை குவித்து, நெதர்லாந்து அணிக்கு 411 என்னும் இலக்கினை வெற்றிக்காக நிர்ணயித்தது. அதன்படி தீவிரமாக களத்தில் இறங்கி விளையாடிய நெதர்லாந்து அணி இலக்கினை சேஸ் செய்ய கடுமையாக முயற்சித்தது என்றே கூறவேண்டும். இப்போட்டியில் வென்றாலும் உலகக்கோப்பை தொடரில் தொடர முடியாது என்னும் நிலையில், நெதர்லாந்து கிரிக்கெட் அணி 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது. இதன்மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

முதன்முறையாக உலக கோப்பை போட்டியில் 9 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னேறிய இந்தியா