INDvsAUS : இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. தற்போது 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, வரும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் திரும்புவது அணிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. இதற்கிடையே, முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதில் உறுதியாக உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், டாப் ஆர்டர் மிட்செல் ஸ்டார்க்கின் இன்ஸ்விங்கில் வீழ்ந்ததால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தங்களது பேட்டிங்கை மேம்படுத்துவதில் இந்திய அணி தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா இரண்டாவது ஒருநாள் போட்டி விபரம்
விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் மார்ச் 19 பிற்பகல் 1:30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 வீரர்கள் பின்வருமாறு :- இந்திய அணி : ஷுப்மான் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய அணி : டேவிட் வார்னர்/மார்னஸ் லாபுஷாக்னே, டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்