
ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்திகார் அகமது ஆசிய கோப்பையில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசியுள்ளார்.
முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் அவர் ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து கடைசி வரை ஆட்டமிக்காமல் 109 ரன்கள் எடுத்தார்.
இருவரும் 124/4 என்று அணி தடுமாறியபோது களமிறங்கி ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த ஜோடியாக சாதனை படைத்தனர்.
பாபர் அசாமும் தனது 19வது ஒருநாள் சதத்தை இதில் விளாசிய நிலையில், பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது.
iftikhar ahmed odi numbers
ஒருநாள் கிரிக்கெட்டில் இப்திகார் அகமது புள்ளிவிபரங்கள்
இப்திகார் அகமது 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபுதாபியில் நடந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
எனினும் பாகிஸ்தான் அணிக்காக மிகவும் குறைவான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
மொத்தமாக இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இப்திகார் அகமது 50.25 என்ற சராசரியில் 400 ரன்களை (402) கடந்துள்ளார்.
நேபாளத்திற்கு எதிரான இந்த போட்டிக்கு முன், அவர் ஒருநாள் வடிவத்தில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார்.
இதற்கிடையே, உள்நாட்டில் (பாகிஸ்தானில்) ஒருநாள் போட்டிகளில் இப்திகார் அகமதுவின் சராசரி 86.75 ஆக உள்ளது.