Page Loader
PAKvsNED : நெதர்லாந்தின் பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்; 286 ரன்களுக்கு ஆல் அவுட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்

PAKvsNED : நெதர்லாந்தின் பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்; 286 ரன்களுக்கு ஆல் அவுட்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்துக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்த நிலையில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்ததால் 10வது ஓவரில் 38 ரன்களில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் நிலைத்து நின்று தலா 68 ரன்கள் எடுத்து அணியை மீட்டனர்.

Pakistan all out for 286 against netherlands

4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாஸ் டி லீடே

முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முகமது நவாஸ் சதாப் கான் முறையே 39 மற்றும் 32 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், 49 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக வலம்வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்தின் பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.