Page Loader
தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை; வைரலாகும் நீரஜ் சோப்ராவின் செயல்
நீரஜ் சோப்ராவிடம் தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை

தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை; வைரலாகும் நீரஜ் சோப்ராவின் செயல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2023
02:06 pm

செய்தி முன்னோட்டம்

ஹங்கேரியின் புடாபெஸ்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு ஹங்கேரிய பெண்மணி ஒருவர் இந்தியக் கொடியில் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார். தேசிய கொடியில் ஆட்டோகிராப் போடுவது சரியல்ல என நினைத்த அவர், பெண்ணின் சட்டை ஸ்லீவில் ஆட்டோகிராப் போட்டார். இதை அந்த பெண்ணும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இது அவரது முதிர்ச்சியின் அளவை காட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

தேசிய கொடியில் ஆட்டோகிராப் போடுவதை தவிர்த்த நீரஜ் சோப்ரா