விளிம்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு, மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்களின் ஒவ்வொரு கணிப்புகளிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளவை என இரண்டு அணிகள் கூறப்பட்டு வந்தன. இதில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து. இந்தியா இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. ஆனால், மறுபுறம் இங்கிலாந்து இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மிகவும் பின்தங்கி உள்ளது. இதனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் மீண்டு வர முடியும் என நம்புகிறது. எப்படி?
2023 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இன்னும் ஐந்து ஆட்டங்கள் உள்ளன. இந்த ஐந்திலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 12 புள்ளிகள் கிடைக்கும். இது அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பை நேரடியாக உறுதி செய்யாவிட்டாலும், வாய்ப்பை தக்கவைத்திருக்கும். அதாவது, இங்கிலாந்து வெற்றி பெறுவதோடு, மீதமுள்ள ஒன்பது அணிகளின் வெற்றி தோல்வியையும் பொறுத்து அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும். இதை சாத்தியமாக்க வேண்டுமென்றால், இங்கிலாந்து அடுத்து நடக்க உள்ள அனைத்து போட்டிகளிலும் பெரு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே, வியாழக்கிழமை (அக்டோபர் 26) இலங்கையுடன் இங்கிலாந்து அணி மோத உள்ளது.