சர்வதேச மகளிர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி ஆறாவது இடத்திற்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ராஞ்சியில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி பட்டம் வெண்றதைத் தொடர்ந்து உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்தியா, தற்போது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றுள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி கடைசியாக ஜூன் 2022 இல் நடந்த எப்ஐஎச் ப்ரோ லீக்கின் போது, கடைசியாக ஆறாவது இடத்தைப் பிடித்த நிலையில், அதன் பிறகு மீண்டும் தற்போது ஆறாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
India women's hockey team rises to sixth position in FIH rankings
நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணி முதலிடம்
உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக நெதர்லாந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவும் உள்ளன.
இந்தியாவை விட மேலே உள்ள மற்ற இரண்டு அணிகளில் பெல்ஜியம் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ராஞ்சியில் ஜனவரி 13 முதல் 19 வரை நடைபெறவிருக்கும் எப்ஐஎச் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் போட்டியிடும் இந்திய அணி ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டும் நிலையில், உலக தரவரிசையில் முன்னேற்றம் கிடைத்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் முயற்சியில் இந்தியா ஜெர்மனி, நியூசிலாந்து, ஜப்பான், சிலி, அமெரிக்கா, இத்தாலி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் எப்ஐஎச் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் மோத உள்ளது.