ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷ் துபே சாதனை
செய்தி முன்னோட்டம்
விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் கேரளாவுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது 22 வயதான இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த இறுதிப் போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 2024-25 சீசனில் அவரது விக்கெட் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் பீகாரின் அசுதோஷ் அமன் 68 விக்கெட்டுகள் வீழ்த்திய முந்தைய சாதனையை முறியடித்தார்.
இறுதிப் போட்டியில் ஹர்ஷ் துபே கேரளாவின் முக்கியமான ஆதித்யா சர்வதே, சல்மான் நிசார் மற்றும் எம்.டி.நிதிஷ் ஆகியோரை வீழ்த்தியதன் வலுவான நிலையில் உள்ளது.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில் தற்போதைய நிலவரம்
பிப்ரவரி 26 அன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்தது. டேனிஷ் மலெவர் 153 ரன்களை எடுத்தார்.
கேரளாவின் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங் செய்த கேரளா இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் கேரளா 37 ரன்கள் பின்தங்கியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கேரளா கிரிக்கெட் அணி ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு இந்த முறைதான் தகுதி பெற்றுள்ளது.