
"மை பார்ட்னர் இன் க்ரைம்": மகன் அகஸ்தியாவுக்கு ஹர்திக் பாண்டியாவின் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா, இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனது மகன் அகஸ்தியாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார் ஹர்திக்.
மேலும் ஹர்திக் ஒரு சிறப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் அகஸ்தியா தனது தந்தையின் செயல்களை நகலெடுப்பதைக் காண முடிந்தது.
தந்தை-மகன் இருவரும் சேர்ந்து 'ஜெங்கா' என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியுடன் மகனுடன் கொஞ்சி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
தனது வாழ்த்தில்,"மை பார்ட்னர் இன் க்ரைம்" என ஹர்திக் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஹர்திக் பாண்டியாவின் பிறந்தநாள் வாழ்த்து
Hardik Pandya shares the sweetest video to wish his son Agastya on his birthday.
— HT City (@htcity) July 30, 2024
"You keep me going every single day! Happy birthday to my partner in crime, my whole heart, my Agu ❤️ Love you beyond words 🥰🥰🥰"#hardikpandya #NatasaStankovic #Agastya #indiancricketteam pic.twitter.com/Eb47GGmomY
விவாகரத்து
ஹர்திக்-நடாசா விவாகரத்து
சில நாட்களுக்கு முன்னர், நான்கு வருட உறவுக்குப் பிறகு மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சுடன் பிரிந்ததாக ஹர்திக் பாண்டியா அறிவித்தார்.
பல மாத ஊகங்களுக்குப் பிறகு, அதிகாரபூர்வமாக ஹர்திக் தனது முடிவை கடந்த ஜூலை 18 அன்று இன்ஸ்டாகிராம் இடுகை மூலம் அறிவித்தார்.
அதற்கு இரு தினங்களுக்கு முன்னரே நடாசா ஸ்டான்கோவிச் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, மகன் அகஸ்தியாவுடன் செர்பியாவில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்றார்.
அவர் சமீபத்தில் தனது மகன் அகஸ்தியுடனான தனது நாட்களின் படங்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாடல் அழகியான நடாஷா, கொரோனா லாக் டௌனின் போது ஹர்திக் பாண்டியவை மணந்து கொண்டார்.