LOADING...
சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஹர்திக்! வான்கடே மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 வழங்கினார்
வான்கடே மைதான ஊழியர்களுக்கு ஹர்திக் பாண்டியா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஹர்திக்! வான்கடே மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 வழங்கினார்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 சீசன் நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு நெகிழ்ச்சியான செயலின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். வான்கடே மைதானத்தின் தரைப் பராமரிப்பு ஊழியர்களுக்கு (Ground staff) அவர் வழங்கிய பரிசு, ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது. இந்தத் தொடருக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்காகக் கூடுதல் நேரம் ஒதுக்கி மைதானத்தைத் தயார் செய்த ஊழியர்களுக்கு, உலகக்கோப்பை முடிந்த பிறகு நிச்சயம் பரிசு வழங்குவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

பணமுடிப்பு

ஊழியர்களுக்குப் பணமுடிப்பு

நேற்று (மார்ச் 26) வான்கடே மைதானத்திற்குச் சென்ற ஹர்திக், அங்குள்ள ஊழியர்களை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார். உலகக்கோப்பை பயிற்சியின் போது கூடுதல் நேரம் உழைத்த ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ₹10,000 காசோலையை அவர் பரிசாக வழங்கினார். முன்னதாக அவர் ₹10 லட்சம் வழங்கியதாகத் தகவல்கள் பரவினாலும், அவர் தலா ₹10,000 வழங்கியதை உறுதி செய்துள்ளனர். தொகையை விட அவர் காட்டிய அந்த அன்பு மற்றும் அங்கீகாரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஊழியர்களுடன் ஹர்திக் பாண்டியா கைகுலுக்கி, அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. ஒரு கேப்டனாக மைதானத்தின் வெற்றிக்குக் காரணமான 'திரைக்குப் பின்னால் இருக்கும் நாயகர்களை' அவர் கௌரவித்தது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2026 இல் மும்பை இந்தியன்ஸ்

உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா இப்போது முழுமையாக ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். ஹர்திக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. சமீபத்தில் பயிற்சியின் போது ஹர்திக் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் தீவிரமாகத் திட்டம் வகுக்கும் வீடியோவும் வெளியாகி, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை அணி தனது 6வது கோப்பையை வெல்லுமா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

Advertisement