Page Loader
0.9 கிராம் எடையில் ஒருநாள் உலகக்கோப்பையை வடிவமைத்து அகமதாபாத் நகைக்கடைக்காரர் சாதனை
0.9 கிராம் எடையில் ஒருநாள் உலகக்கோப்பையை வடிவமைத்து அகமதாபாத் நகைக்கடைக்காரர் சாதனை

0.9 கிராம் எடையில் ஒருநாள் உலகக்கோப்பையை வடிவமைத்து அகமதாபாத் நகைக்கடைக்காரர் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 13, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் உள்ள நகைக்கடைக்காரர் ரவூப் ஷேக் 0.9 கிராம் எடையுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் மாதிரியை வடிமைத்துள்ளார். இந்த மினியேச்சர் தங்கக் கோப்பைகளை உருவாக்கியது குறித்து பேசிய ரவூப் ஷேக், "2014இல், 1.200 கிராம் எடையுள்ள உலகக்கோப்பையை உருவாக்கினேன், 2019ல், 1 கிராம் கோப்பையை உருவாக்கி எனது சொந்த சாதனையை முறியடித்தேன்". "இப்போது 2023ல், 0.900 கிராம் எடையுள்ள கோப்பையை தயாரித்துள்ளேன். வரவிருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது எனக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்த கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வழங்குவேன்." என்று கூறினார். இந்த சிறிய தலைசிறந்த படைப்பு நகைகள் செய்யும் கலையில் அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மினியேச்சர் தங்க உலகக்கோப்பையை உருவாக்கிய அகமதாபாத் நகைக்கடைக்காரர்