நீண்ட நாட்களாக துப்பு கிடைக்காத வழக்கை தீர்த்து வைத்த கூகிள் மேப்ஸ்
ஆச்சரியமான நிகழ்வுகளில், கூகுள் மேப்ஸின் ஸ்ட்ரீட் வ்யூ தற்செயலாக கிளிக் செய்த காட்சி, ஸ்பெயினில் காணாமல் போன போனவரின் வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. வடக்கு ஸ்பெயினின் Tajueco இல் உள்ள ஒரு வெறிச்சோடிய தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபர் ஒரு பெரிய வெள்ளை பையை சிவப்பு காரின் டிக்கியில் வைத்ததை கூகிள் கிளிக் செய்தது. அக்டோபர் 2024இல் க்ளிக் செய்யப்பட்ட இந்தப் படம், இன்னும் கூகுள் மேப்ஸில் இருந்ததால், கவத்துறையினர் விசாரணைக்கு உதவியுள்ளது.
வழக்கின் பின்னணி: கியூபா நாட்டவர் காணாமல் போனார்
இந்த வழக்கு நவம்பர் 2023க்கு முந்தையது. வடக்கு ஸ்பெயினின் நகராட்சியான சோரியாவில் வசிக்கும் கியூபா நாட்டவர். அவரது குடும்ப உறுப்பினரால் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டதாக எல் பைஸ் செய்தித்தாள் தெரிவிக்கிறது. காணாமல் போனவர் தனது காதலியைத் தேடி சோரியா (ஸ்பெயினில் உள்ள ஒரு நகரம்) வந்துள்ளார். திடீரென அந்த நபரின் தொலைபேசியில் இருந்து உறவினர் ஒருவருக்கு, தான் வேறொரு பெண்ணைக் கண்டுபிடித்ததாகவும், அதோடு ஸ்பெயினில் இருந்து வெளியேறி தனது தொலைபேசியை நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்தபோது சந்தேகம் எழுந்தது.
விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
விசாரணையில் காணாமல் போன நபரின் முன்னாள் காதலியும், அவளுடைய தற்போதைய காதலருக்கும் தொடர்பு இருக்கும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். நவம்பர் 2024 இல், கியூபா நாட்டவர் காணாமல் போனது மற்றும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தில் அந்த தம்பதியினரை போலீஸார் கைது செய்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, காணாமல் போன மனிதனுடையது என்று நம்பப்படும் ஒரு உடல், தாஜுகோ (சோரியா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி) அருகிலுள்ள ஒரு கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கூகுள் மேப்ஸின் பங்கு
கூகுள் மேப்ஸின் முக்கியப் பங்காக கொலைச் சம்பவம் தொடர்பான படங்களைப் படம்பிடித்தது என காவல்துறையும் ஒப்புக்கொண்டுள்ளது. "குற்றத்தைத் தீர்க்க புலனாய்வாளர்கள் பயன்படுத்திய தடயங்களில் ஒன்று, முடிவாக இல்லாவிட்டாலும், சாரணையின் போது மேப்ஸ் ஆப்-இல் விகண்டறியப்பட்ட படங்கள்" என்று ஒரு போலீஸ் அறிக்கை கூறியது. இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய வாகனத்தை அடையாளம் காண இந்தப் படங்கள் உதவியது.
Tajueco குடியிருப்பாளர்கள் குற்றம் பற்றி தெரியாது
வெறும் 56 பேர் கொண்ட சிறிய சமூகமான Tajueco வாசிகள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தனர். கூகுள் மேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட படங்களை பல உள்ளூர்வாசிகள் பார்த்திருக்கிறார்கள், ஆனால் எந்த குற்றச் செயலையும் சந்தேகிக்கவில்லை. "அவர் அதை செய்வார் என்று நாங்கள் கற்பனை செய்திருக்க மாட்டோம், நாங்கள் அதைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை," என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார். மற்றொருவர், "புகைப்படத்தில் கார் பின்னல் ஒரு உடல் இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை" என்று கூறினார்.