அடுத்த செய்திக் கட்டுரை

மனைவியுடன் ருதுராஜ் கெய்க்வாட்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!
எழுதியவர்
Sekar Chinnappan
Jun 05, 2023
11:58 am
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சனிக்கிழமை (ஜூன் 3) அன்று திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், உத்கர்ஷா கெய்க்வாட் உடன் திருமணம் முடித்தார்.
மஹாபலேஸ்வரர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உத்கர்ஷா தனது மாநிலத்திற்காக விளையாடியுள்ளார்.
வலது கை பந்துவீச்சாளரான உத்கர்ஷா நவம்பர் 2021 இல் சீனியர் மகளிர் ஒருநாள் டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடினார்.
உத்கர்ஷா தற்போது புனேவில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி அறிவியல் நிறுவனத்தில் படித்து வருகிறார்.