அடுத்த செய்திக் கட்டுரை

செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம்
எழுதியவர்
Sekar Chinnappan
Apr 06, 2023
07:40 pm
செய்தி முன்னோட்டம்
செல்சியா கால்பந்து அணி 2022-23 தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்டை நியமித்துள்ளது.
ஜனவரி 2021 இல் செல்சியாவிலிருந்து வெளியேறிய பிராங்க் லம்பார்ட் தற்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
சமீபத்தில் செல்சியா அணி தொடர்ந்து தோல்விகளை பெற்று வந்த நிலையில், அணியின் பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கப்பட்டார். முன்னதாக, செப்டம்பரில் தாமஸ் துச்செல் செல்சியாவால் நீக்கப்பட்டார்.
பிரீமியர் லீக் 2022-23 புள்ளிப்பட்டியலில் செல்சி 29 ஆட்டங்களில் 10 வெற்றி, 10 தோல்வி மற்றும் 9 டிராவுடன் 39 புள்ளிகளை பெற்று 11வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையில், சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் அணியுடன் மோத உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செல்சியா ட்வீட்
Watch Frank Lampard look ahead to #WolChe. https://t.co/qXUZiGYwHZ
— Chelsea FC (@ChelseaFC) April 6, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது