இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மோர்கன், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு முதல் முறையாக கோப்பையை பெற்றுத் தந்தார். 126 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு கேப்டனாக இருந்தார் மற்றும் இங்கிலாந்து அணியின் வொயிட் பால் கிரிக்கெட்டில், மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தார். மோர்கன் சமீபத்தில் தென்னாய்ப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக்கில் விளையாடியிருந்தார். எஸ்ஏ 20 லீக் முடிந்த நிலையில்,ம தற்போது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியுள்ளார். ஓய்வு குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.