துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை!
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கிய கிளப்பான ஹேடேய்ஸ்போர் அணிக்காக விளையாடும் கானா நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீரர் அட்சு, இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், ஹேடேய்ஸ்போர் கிளப்பின் இயக்குனர் டேனர் சாவுட்டும் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருப்பதாக நம்பப்படுவதாகவும், கிளப் அதிகாரிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அணியின் செய்தித் தொடர்பாளர் ஒசாட் கூறினார். இதற்கிடையே , மேலும் இரண்டு ஹேடேய்ஸ்போர் வீரர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக உள்ளதகா ஒசாட் கூறினார்.
நிலநடுக்கத்தால் வரலாறு காணாத பேரழிவு
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவின் பெரும்பகுதியை திங்கள்கிழமை (பிப்ரவரி 6) அதிகாலையில் உலுக்கியது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸை மையமாகக் கொண்டு, எகிப்தின் கெய்ரோ வரை உணரப்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, 7.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது அதிர்வு ஏற்பட்டது. இதில் 3,700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போதுவரை 4,200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு வருகின்றனர்.