Loading...
மெஸ்ஸி - லமைன் யமால்: அன்று டப்பில் குளிப்பாட்டிய குழந்தை, இன்று FIFA உலகக்கோப்பை பைனலில் எதிராளி!
அன்று மெஸ்ஸி டப்பில் குளிப்பாட்டிய குழந்தை லமைன் யமால்

மெஸ்ஸி - லமைன் யமால்: அன்று டப்பில் குளிப்பாட்டிய குழந்தை, இன்று FIFA உலகக்கோப்பை பைனலில் எதிராளி!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
07:33 am

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பையின் மகுடத்தை சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன. உலகக் கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த ஜாம்பவானான 39 வயது லியோனல் மெஸ்ஸிக்கும், கால்பந்தின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக கருதப்படும் 19 வயது இளம் புயல் லமைன் யமாலுக்கும் இடையிலான இந்த மோதல், உலகக் கோப்பை வரலாற்றின் மிக உணர்ச்சிப்பூர்வமான ஒரு வரலாற்று தருணமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு

2007-ல் நடந்த போட்டோ ஷூட்

இந்த இரு துருவங்களின் உலகக்கோப்பை மோதலுக்குப் பின்னால், 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் ஒளிந்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில், பார்சிலோனாவின் கேம்ப் நவ் மைதானத்தில் உள்ள ஒரு லக்கர் அறையில் மெஸ்ஸி மற்றும் லமைன் யமாலின் பாதைகள் முதன்முதலில் சந்தித்தன.

'டயாரியோ ஸ்போர்ட்' என்ற உள்ளூர் பத்திரிகை, UNICEF அமைப்புடன் இணைந்து நடத்திய ஒரு தொண்டு நிறுவன காலண்டர் புகைப்படத் தேர்விற்காக ஸ்பெயினின் ரொக்கா ஃபோண்டா பகுதியில் ஒரு குலுக்கல் நடத்தப்பட்டது.

அதில், ஒரு சாதாரண உழைக்கும் வர்க்கக் குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தைக்கு பார்சிலோனா வீரருடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த குழந்தைதான் இன்றைய நட்சத்திர வீரர் லமைன் யமால்!

குளியல்

பேபி யமாலை குளிப்பாட்டிய மெஸ்ஸி

அப்போது நீண்ட முடியுடன் 20 வயது இளம் வீரராக வலம் வந்த மெஸ்ஸி, லமைன் யமாலின் தாய் ஷீலா எபானாவின் உதவியுடன், ஒரு பிளாஸ்டிக் டப்பில் இருந்த 6 மாதக் குழந்தை யமாலுக்கு சோப்பு நுரைகளுடன் குளிப்பாட்டுவது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது.

இன்று கால்பந்து உலகைக் கலக்கும் லமைன் யமாலுக்கு, அன்று மெஸ்ஸி அறியாமல் செய்த அந்த 'ஞானஸ்நானம்' தான் அவரது அசுரத்தனமான கால்பந்து திறமைக்குக் காரணம் என ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இறுதி போட்டி

இரு வேறு சகாப்தங்களின் மோதல்

பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லா மாசியா' அகாடமியில் வளர்ந்த லமைன் யமால், மெஸ்ஸியை தனது முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவர்.

வியப்பூட்டும் விதமாக, மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தங்களது 19 வயதில் எடுத்த கோல்கள் மற்றும் அசிஸ்ட்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட, லமைன் யமால் தனது 19 வயதிற்குள் அதிக கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, 2026 மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த ஃபைனலிசிமா தொடரில் இவர்கள் இருவரும் மோதவிருந்தனர்.

ஆனால், மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஆனால், விதி இவர்களை உலகக் கால்பந்தின் மிக உயரிய மேடையான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதவிட்டுள்ளது.

ADVERTISEMENT