Page Loader
CT 2025: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

CT 2025: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2025
08:09 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. லாகூரின் கடாஃபி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து இந்த சாதனையை படைத்துள்ளது. இதில் இங்கிலாந்து 351/8 ரன்கள் எடுத்தது. முன்னதாக, 2004 ஆம் ஆண்டு ஓவலில் அமெரிக்காவிற்கு எதிராக நியூசிலாந்தின் 347/4 என்பதே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பென் டக்கெட்

பென் டக்கெட்டின் சிறப்பான ஆட்டம்

இங்கிலாந்தின் சாதனை ஸ்கோருக்கு முக்கிய காரணமாக அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் இருந்தார். அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். இது இப்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். குறிப்பிடத்தக்க வகையில், மேலே குறிப்பிட்டுள்ள 2004 ஆம் ஆண்டு ஓவல் போட்டியில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்ட்லே 145 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் ஒருவரின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோராக இதற்கு முன்னர் இருந்தது.

ஜோ ரூட்

ஜோ ரூட்டின் சிறந்த ஆட்டம்

முதல் பவர்பிளேயில் இங்கிலாந்து இரண்டு விரைவான விக்கெட்டுகளை இழந்த பிறகு, ஜோ ரூட் பென் டக்கெட்டுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் 78 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். கிரிக்பஸின் கூற்றுப்படி, ஜூன் 2018 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ள 11 ஒருநாள் இன்னிங்ஸ்களில் (ஜூன் 2018 முதல்) ஜோ ரூட் தனது முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோரை இந்த போட்டியில் பதிவு செய்தார். போட்டியில் தனது முதல் ரன் மூலம், ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் 20,500 ரன்களையும் நிறைவு செய்தார்.