FIFA உலகக்கோப்பையில் சர்ச்சை: ட்ரம்பின் 'ஒற்றை ஃபோன் கால்'; உருகிப்போன ஃபிஃபா விதிமுறைகள்
செய்தி முன்னோட்டம்
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியின் ரெட் கார்டு தண்டனையும் இவ்வளவு வேகமாக மாற்றி எழுதப்பட்டதில்லை. ஆனால், 2026 உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்கா, தனக்கு ஒரு விதிமுறை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக 'கஸ்டமர் கேருக்கே' கால் செய்யும் என்பதை நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால், FIFA தனது விதிமுறையை தளர்த்தியுள்ளதாக எழுந்துள்ள விவாதம் தற்பொழுது உலக கால்பந்து அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ரெட் கார்டு
போஸ்னியா போட்டியில் பலோகனுக்கு ரெட் கார்டு
அமெரிக்கா மற்றும் போஸ்னியா-ஹெர்ட்ஸகோவினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 32-வது சுற்று போட்டியில், அமெரிக்க நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஃபோலரின் பலோகனுக்கு நடுவர் ரஃபேல் கிளாஸ் ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றினார். விதிகளின்படி அவர் அடுத்த நாக்-அவுட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. நடுவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார், ஃபிஃபாவின் விதிப்புத்தகமும் நடுவருக்கு ஆதரவாகவே இருந்தது.
அழைப்பு
ட்ரம்பின் 'பிரசிடென்ஷியல் வைப் செக்'
இந்தச் சூழலில்தான் நவீன கால்பந்தின் மிக சக்திவாய்ந்த விசித்திரமான தலையீடு நிகழ்ந்தது. இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த ட்ரம்ப், "அது Foul-லே இல்லை" என்று முடிவு செய்தார். தனக்கு ரெட் கார்டு விதிகளின் நுணுக்கங்கள் முழுமையாக தெரியாது என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அவர் நேரடியாக ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கால்பந்து உலகில் தற்பொழுது நீதி வழங்கப்பட நான்கு அடுக்கு முறைகள் உள்ளதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 1. நடுவரின் முடிவு 2. விஏஆர் மறுபரிசீலனை 3. ஃபிஃபா ஒழுங்குமுறை குழுவின் விசாரணை இறுதியாக, 4. அமெரிக்க அதிபரின் விருப்பத் தேர்வு
குற்றச்சாட்டுகள்
நீக்கப்பட்ட தடை; எழும் பாரபட்ச குற்றச்சாட்டுகள்
வியக்கத்தக்க வகையில், ட்ரம்பின் இந்த அழைப்பிற்கு பிறகு பலோகனுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு, அவர் அடுத்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தற்செயலானது என்றும், சுதந்திரமான குழு எடுத்த முடிவு என்றும் ஃபிஃபா கூறினாலும், கால்பந்து விமர்சகர்கள் இதனை ஏற்கவில்லை. "ஒருவேளை பெல்ஜியம் அணி தங்களின் நட்சத்திர வீரர் கெவின் டி புருய்னேவுக்கு விதிக்கப்படும் தடையை நீக்க வேண்டுமென்றால், அவர்கள் வெள்ளை மாளிகைக்கு ஃபோன் செய்ய முடியுமா அல்லது அதிகாரப்பூர்வமாகப் படிவங்களை நிரப்பிப் பல நாட்கள் காத்திருக்க வேண்டுமா?" என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மறுபரிசீலனை
ட்ரம்ப் அளித்த 'அசிஸ்ட்'
ஃபிஃபாவின் இந்த அதிரடித் திருப்பத்தை ட்ரம்ப் "மிகச்சிறந்த முடிவு" என்று பாராட்டியுள்ளார். இதன் மூலம் ஒரே வாரத்திற்குள் ஃபிஃபா எடுத்த ஒரு முடிவு தவறானது என்றும், அதே நேரத்தில் பிரமாதமானது என்றும் அமெரிக்காவால் சான்றளிக்கப்படும் விசித்திரமான சூழல் உருவாகியுள்ளது. "நான் மறுபரிசீலனை செய்ய மட்டுமே கோரினேன், இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று ட்ரம்ப் கூறினாலும், கால்பந்து ரசிகர்கள் இதனை ட்ரம்ப் அடித்த ஒரு கச்சிதமான 'அசிஸ்ட்' என்றே வர்ணிக்கிறார்கள். இதே நிலை நீடித்தால், அமெரிக்கா இறுதிப்போட்டிக்குச் சென்றால் விஏஆர் சோதனைகள் அனைத்தும் அதிபரின் ஓவல் அலுவலகத்திலிருந்தே நடத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கால்பந்து உலகினர் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: President Trump reveals the details of his conversation with FIFA President Gianni Infantino over the controversial red card call on star American player Folarin Balogun.
— Fox News (@FoxNews) July 6, 2026
"All I did was ask for a review because I didn't think it was a foul. And, you know, again, I'm… pic.twitter.com/MD5Q9t44th