
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்க போகுது! அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் சீசனை துலீப் டிராபியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது.
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட தியோதர் டிராபியையும் மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, 2023-24 சீசனுக்காக பிசிசிஐ தயாரித்த அட்டவணையின்படி, ஜூன் 28 முதல் ஜூலை 16 வரை துலீப் டிராபி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று சீசன்களில் ரத்து செய்யப்பட்ட தியோதர் டிராபியை ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 3 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐ
3 ஆண்டுகளுக்கு பிறகு தியோதர் டிராபி
2020 முதல் நடத்தப்படாத தியோதர் டிராபி போட்டி, மண்டல வடிவத்தில் விளையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அரங்குகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், போட்டி நடக்க உள்ள சமயத்தில் பருவமழையை மனதில் வைத்து பெங்களூரு அல்லது தமிழ்நாட்டில் நடத்தப்படம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் பருவமழை முடிந்ததும், இராணி கோப்பை அக்டோபர் 1 முதல் 5 வரை நடைபெறும், சௌராஷ்டிரா ரெஸ்ட் ஆப் இந்தியா அணியுடன் மோதும்.
சையத் முஷ்டாக் அலி டிராபி அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரையிலும், விஜய் ஹசாரே டிராபி நவம்பர் 23ஆம் தேதியிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஞ்சி டிராபி தற்காலிக அட்டவணையின்படி, ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 14ஆம் தேதி வரை முடிவடையும்.