
"நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய்
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மத்தியில் நாய் ஒன்று உள்ளே புகுந்து ஓடும் காணொளி வைரலாகி வருகிறது.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
இதற்கிடையே முதல் இன்னிங்ஸில் நடுவே திடீரென ஒரு நாய் மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
இந்த காணொளி வைரலாகி வரும் நிலையில், நாயும் பீல்டிங் செய்ய வந்திருக்கும் எனக் கூறி கலாய்த்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ட்வீட்
Lots of noise at #Chepauk during the cricket match.
— Srinivasa Ramanujam (@srinivasjam) March 22, 2023
And, some naai-s too.
A dog disrupts play at the #INDvsAUS match in #Chennai. pic.twitter.com/jtLRkZMYGj