RCB அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்
கடந்த ஐபிஎல் 2024 போட்டித்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் தினேஷ் கார்த்திக். அவரின் அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே தற்போது அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமித்துள்ளது அணி நிர்வாகம். தினேஷ் கார்த்திக் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உள்பட 4842 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இதுவரை, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு விளையாடியுள்ளார். எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் தான், அவர் ஓய்வை அறிவித்தாலும் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துள்ளது.