சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நடக்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்பது குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 12) சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் காலை நொண்டியபடி நடந்ததால், அவரது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் தோனியின் காலில் காயம் இருப்பதை உறுதி செய்தார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியதன் முழு விபரம்
ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். தோனியின் காயம் குறித்து பேசிய காசி விஸ்வநாதன், தோனிக்கு உண்மையில் முழங்காலில் பிரச்சனை இருப்பதாக உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என உறுதியளித்துள்ளார். மேலும், பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய காசி விஸ்வநாதன், ஏப்ரல் 30 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பு முழு உடல்தகுதியை பெற்று தயாராகி விடுவார் எனக் குறிப்பிட்டார்.