Page Loader
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்!
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 06, 2023
03:39 pm

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார். தனுஷ் இறுதிப் போட்டியில் 249.4 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்ற ஸ்வீடனின் பொன்டஸ் கல்லினை 1.3 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை உறுதி செய்தார். பிரான்ஸ் வீரர் ரோமெய்ன் ஆஃப்ரேர் வெண்கலம் வென்றார். இதேபோல் ஸ்கீட் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் ஹர்மேஹர் லாலி மற்றும் சஞ்சனா சூட் ஆகியோர் வெண்கலம் வென்றனர். இந்தியா தற்போது 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post