Loading...
திருமண ஆசை காட்டி ஏமாற்றம்? டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் அதிரடி கைது
டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் கைது

திருமண ஆசை காட்டி ஏமாற்றம்? டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் அதிரடி கைது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
04:07 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹூக்ளி மாவட்டம் மகரா காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா, குற்றம் சாட்டப்பட்டுள்ள அபிஷேக் போரெலை உடனடியாகக் கைது செய்யவும், அவருடைய கைபேசி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, அபிஷேக் போரெல் கைது செய்யப்பட்டு சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள்

FIR-இல் இடம் பெற்றுள்ள தீவிரக் குற்றச்சாட்டுகள்

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருமண வாக்குறுதி அளித்துப் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் 2, 2026 அன்று டெல்லியில் வைத்து தன்னை சட்டவிரோதமாக சிறைவைத்து, உணவு வழங்காமல் தனிமைப்படுத்தியதாகவும், இதனால் தனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிஷேக் போரெல் மீது ஜாமீனில் வர முடியாத பல கடுமையான பிரிவுகளின் கீழ் மகரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாகப் புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டுப்பாட்டில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT