மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி குறித்த ஒரு பார்வை
சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசனில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனையான விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி உ.பி.வாரியர்ஸை வழிநடத்த உள்ளார். இதில் தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இருவரையும் தவிர, உ.பி.வாரியர்ஸ் அணியில் ஷப்னிம் இஸ்மாயில், தஹ்லியா மெக்ராத் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் போன்ற தலைசிறந்த வீராங்கனைகள் பலர் உள்ளனர். முன்னதாக பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி 10 இந்திய வீராங்கனைகளையும் ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளையும் வாங்கியது. இதில் தீப்தி அதிகபட்சமாக ரூ. 2.6 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில், சோஃபி எக்லெஸ்டோன் ரூ. 1.8 கோடிக்கும், அலிசா ஹீலி ரூ. 70 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.
உ.பி.வாரியர்ஸ் அணி விபரம்
தஹ்லியா மெக்ராத் ரூ. 1.4 கோடிக்கும் ஷப்னிம் இஸ்மாயில் ரூ. 1 கோடிக்கும் உ.பி.வாரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இதர முக்கிய வீராங்கனைகள் ஆவர். அணி: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி சர்மா (துணை கேப்டன்), தஹ்லியா மெக்ராத், ஷப்னிம் இஸ்மாயில், அலிசா ஹீலி (கேப்டன்), அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட், ஸ்வேதா ஷெராவத், எஸ் யஷஸ்ரீ, கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, லாரன் ஷாவிக், லாரன் ஷாவிக், லாரன் ஷாவிக், லாரன் பெல். மார்ச் 4 ஆம் தேதி மகளிர் ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில், உ.பி.வாரியர்ஸ் தனது முதல் போட்டியில் மார்ச் 5 ஆம் தேதி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.