மகளிர் ஐபிஎல் 2023 : ஆடவரைப் போல் மகளிரிலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துமா?
மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் முதல் மகளிர் ஐபிஎல்லில் (WPL) கவனிக்க வேண்டிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்தியாவின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார். மேலும் நடாலி ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் அணியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணி 17 வீராங்கனைகளை ஏலம் எடுத்துள்ள நிலையில், இதில் அனுபவம் மற்றும் இளமை என சரியான காம்பினேஷனில் வீராங்கனைகள் உள்ளனர். இந்த அணியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்கிவர்-பிரண்ட் அதிகபட்சமாக ரூ. 3.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ரூ.1.80 கோடிக்கு எடுக்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி முழு விபரம்
இந்திய ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் ரூ. 1.9 கோடிக்கும், நியூசிலாந்தின் அமெலியா கெர் ரூ.1.00 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர் பேட்டர் யாஸ்திகா பாட்டியாவிற்கு ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அணி : ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), நடாலி ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, ஹீதர் கிரஹாம், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், தாரா குஜ்ஜார், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், சோலி ட்ரையோன், ஹுமைரா காசி சோ, யாதவ், ஜிந்திமணி கலிதா, நீலம் பிஷ்ட். ஆடவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக கோப்பைகளுடன் வெற்றிகரமான அணியாக வலம் வரும் நிலையில், அதை மகளிர் ஐபிஎல்லிலும் தக்கவைக்குமா என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.