
தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொடர்ந்து மௌனம் காத்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த சம்பவத்தை உலகத் தலைவர்கள் பரவலாகக் கண்டித்துள்ளனர். ஆனால் ஷேபாஸ் ஷெரீப் தனிப்பட்ட முறையில் இன்னும் எந்த முறையான அறிக்கையையும் வெளியிடவில்லை.
பாகிஸ்தான் அரசாங்கம் சம்பவத்திற்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய டேனிஷ் கனேரியா சமூக ஊடகங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
எக்ஸ் பதிவு
டேனிஷ் கனேரியாவின் எக்ஸ் தள பதிவு
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் உள்ளன? ஏனென்றால், உங்களுக்கு உண்மை தெரியும்.
நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள்." என்று டேனிஷ் கனேரியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை பிசிசிஐ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்னதாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
மரியாதை நிமித்தமாக வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டைகளை அணிந்திருந்தனர்.
மேலும் போட்டியின் போது சியர்லீடர்கள் அல்லது கொண்டாட்ட வாணவேடிக்கைகள் அனுமதிக்கப்படவில்லை.