CT 2025: 21 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் பென் டக்கெட்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (பிப்ரவரி 22) லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் பென் டக்கெட் வரலாறு படைத்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கைத் தொடங்கியது.
எனினும், ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பென் டக்கெட் ஜோ ரூட்டுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.
43/2 றன இருந்த நிலையில், சேர்ந்த இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பென் டக்கெட்
பென் டக்கெட் சதம்
ஜோ ரூட் 68 ரன்களில் அவுட்டான நிலையில், பென் டக்கெட் 48வது ஓவர் வரை நின்று 165 ரன்கள் சேர்த்தார். இந்த கூட்டணி அணியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கவும் காரணமாக அமைந்தது.
இதற்கிடையே, பென் டக்கெட் இந்த சிறப்பான ஆட்டம் மூலம், சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்ட்லேவின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனையை முறியடித்தார்.
2004 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எதிராக நாதன் ஆஸ்ட்லே 145 ரன்கள் (நாட் அவுட்) எடுத்திருந்தார்.
இதை 21 ஆண்டுகளுக்கு பிறகு பென் டக்கெட் முறியடித்துள்ளார்.
இதற்கிடையே, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.