Page Loader
"வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம்
"வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம்

"வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2023
06:08 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் புதன்கிழமை (ஏப்ரல் 12) சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்நிலையில், போட்டிக்கு ஒருநாள் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தும் தனது 'வாத்தி' எம்எஸ் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த படத்திற்கு "வாத்தி இங்கே" என தலைப்பு வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதற்கிடையே இரு அணிகளும் ஐபிஎல் 2023 தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் சம புள்ளிகளுடன் உள்ள நிலையில், மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Instagram அஞ்சல்

சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பதிவு