குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன? தோனி கூறியது இது தான்
வெள்ளியன்று (மார்ச் 31) அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, மிடில் ஓவர் பேட்டிகில் சொதப்பியது தான் தங்கள் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் எளிதாக 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பதிலுக்கு குஜராத் டைட்டன்ஸ் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து எம்.எஸ்.தோனி கூறியது என்ன?
போட்டிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசியது பின்வருமாறு:- பனி இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தோம். ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார். எனினும் மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக ரன் எடுக்க தவறி விட்டோம். இதனால் அதிக ரன் குவிக்க முடியாமல் போனது. அறிமுக வீரர் ராஜ் ஹங்கர்கேகர் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்