Loading...
2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி
கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய காமன்வெல்த் கொடி

2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
07:11 am

செய்தி முன்னோட்டம்

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளன. விழாவின் இறுதியில், 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்கவெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள இந்திய நகரமான அகமதாபாத்திடம் காமன்கவெல்த் அமைப்பின் அதிகாரப்பூர்வ கொடி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. நிறைவு விழாவில் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய இசைப் படைப்புகளுடன் தொடங்கி, படிப்படியாக இந்தியாவின் கலாச்சாரப் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய மற்றும் ஸ்காட்லாந்து கலைஞர்கள் இணைந்த 'ஜுகல்பந்தி' கலைநிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்திய பாரம்பரியம், வரலாறு மற்றும் நவீன ஆற்றலை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக அகமதாபாத் 2030 காமன்கவெல்த் தொடருக்கான தொடக்கம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

ஒப்படைக்கும் சடங்கு

காமன்கவெல்த் கொடி ஒப்படைக்கும் சடங்கு மற்றும் கலைநிகழ்ச்சிகள்

விழாவின் மிக முக்கிய நிகழ்வாகக் காமன்கவெல்த் கொடி தரையிறக்கப்பட்டு, அடுத்த தொடரை நடத்தும் இந்திய பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, ஈட்டி எறிதல் வீரன் நீரஜ் சோப்ரா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக கொடியை பெற்றுக்கொண்டனர்.

'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், பிரபல இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன், மனித நேயத்தை வெளிப்படுத்தும் இந்திய மொழிகளின் கலைவடிவங்கள் மற்றும் குஜராத்தின் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகம் செய்யும் திரையிடல்கள் மூலமாகவும் அகமதாபாத்தின் சிறப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

காமன்கவெல்த் தொடர்

2030ஆம் ஆண்டின் காமன்கவெல்த் தொடர்

எடின்பர்க் பிரபு இளவரசர் எட்வர்ட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து, 2030-ஆம் ஆண்டு காமன்கவெல்த் போட்டியின் 100-வது ஆண்டு சிறப்பு தொடரில் பங்கேற்க விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இத்தொடரில் இந்திய அணி 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில், அடுத்ததாக செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ADVERTISEMENT