பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து; விராட் கோலிக்கு பாராட்டு
செய்தி முன்னோட்டம்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மேலும், அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த விராட் கோலியின் சதத்தையும் அவர் பாராட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய அணியின் அபார செயல்திறன்! ஒரு அசத்தலான ஆட்டமிழக்காத சதத்துடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள்.
இதே உத்வேகத்துடன் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் வெல்லுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
Clinical performance by #TeamIndia! 🇮🇳👏
— M.K.Stalin (@mkstalin) February 23, 2025
Kudos to @imVkohli for steering the team to victory with a masterclass unbeaten century.
Let’s keep this momentum going and clinch the #ChampionsTrophy!#INDvsPAK #ChampionsTrophy2025 pic.twitter.com/mCdZ6bsp6B