"உள்ளே வெளியே" ஆட்டத்தால் தவிக்கும் ஷிகர் தவான் : இர்பான் பதான் பரபரப்பு கருத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் ஷிகர் தவான் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்கு உள்ளேயும் வெளியேயும் தடுமாறிக் கொண்டுள்ள தவான், புதன்கிழமையன்று (ஏப்ரல் 5) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிரான ஆட்டத்தில் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.
பிபிகேஎஸ் மற்றும் ஆர்ஆர் இடையேயான ஆட்டத்திற்கு முன்னதாக பேசிய இர்பான், தவானின் ஃபார்ம் அணிக்கு மட்டுமல்ல, அவரது சொந்த நம்பிக்கைக்கும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.
ஷிகர் தவான்
ஷிகர் தவான் குறித்து இர்பான் பதான் பேசியதன் முழு விபரம்
பிபிகேஎஸ் மற்றும் ஆர்ஆர் இடையேயான போட்டிக்கு முன்னதாக இர்பான் பதான் பேசியது பின்வருமாறு:-
ஷிகர் தவான் ஐபிஎல்லில் மூத்த வீரர் மற்றும் பேட்டிங்கிலும் மிகவும் சீராக செயல்படுபவர்.
அதிக மன உறுதி கொண்ட தவான் இந்த ஆண்டு கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருப்பது அவசியம்.
இந்திய அணிக்கு உள்ளேயும் வெளியேயும் அவரை அடிக்கடி நீக்குவதும் சேர்ப்பதுமான போக்கு அவருக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம்.
அதனால்தான் அவர் தன்னை நிரூபிக்க விரும்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலிக்கு அடுத்து தவான் ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.