திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய வீரர்களை தாங்கள் எவ்வாறு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றுவோம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
1990களில் பாகிஸ்தான் அணியில் விளையாடியுள்ள பாசித் அலி தனது யூடியூப் சேனலில், முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனுடன் நடத்திய நேரடி உரையாடலில், இது குறித்த பல ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
பாசித் அலி, தங்கள் ட்ரெஸ்ஸிங் அறையில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் போன்ற வீரர்களை எப்படி ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை திருப்பலாம் என்று திட்டமிடுவோம் என அப்போது கூறினார்.
அதே சமயம், இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீனிடம் ஸ்லெட்ஜிங் செய்துவிடக் கூடாது என்பதில் பாகிஸ்தானின் ஜாம்பவான்கள் கூட உறுதியாக இருந்ததாக கூறியுள்ளார்.
அசாருதீன்
சச்சின் குறித்து பேசிய முகமது அசாருதீன்
இந்த உரையாடலின்போது பேசிய அசாருதீன், மிடில் ஆர்டர் பேட்டராக இருந்த சச்சின் எப்படி தொடக்க ஆட்டக்காரராக மாறினார் என்பது குறித்து விவரித்தார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் 69 ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் தான் களமிறங்கினார்.
ஆனால் அப்போது தனக்கான வாய்ப்புகள் முழுமையாக கிடைக்கவில்லை என அசாருதீனிடம் கூறி, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க கோரிக்கை வைத்ததாகவும், சச்சினின் திறமை குறித்து முழுமையாக அறிந்த அசாருதீன் உடனடியாக அதை ஏற்று செயல்படுத்தியதாவும் கூறியுள்ளார்.
சச்சின் தவிர, அப்போது இளம் வீரர்களாக இருந்த கங்குலி மற்றும் டிராவிட் போன்றவர்களையும் அசாருதீன் தான் வளர்த்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.