ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையை செய்த நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி 12ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியின் பிரண்டன் மெக்முல்லன் 106 ரன்கள் குவித்ததோடு, கேப்டன் ரிச்சி பெரிங்டனும் 64 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்துவீசிய நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 278 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 42.5ஓவர்களில் இலக்கை எட்டி உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது. பாஸ் டி லீடே பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு 123 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் வீரர் பாஸ் டி லீடே ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்த சாதனையை முதன்முதலில் 1987இல் நிகழ்த்தினார். ஒரே ஒருநாள் போட்டியில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்: விவியன் ரிச்சர்ட்ஸ் - 119, 5/41 (1987) பால் காலிங்வுட் - 112*, 6/31 (2005) ரோஹன் முஸ்தபா - 109, 5/25 (2017) அமெலியா கெர் - 232*, 5/17 (2018) பாஸ் டி லீடே - 123, 5/52 (2023)