
BANvsNZ : சச்சின்-சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி இந்த போட்டி தொடங்கும் முன் மூன்றாவது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் இருவரும் சேர்ந்து கூட்டாக 96 ரன்கள் எடுத்ததன் மூலம், மொத்தமாக ஒருநாள் உலகக்கோப்பையில் 983 ரன்கள் சேர்த்துள்ளனர்.
இதன் மூலம், 971 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
Bangladesh pair breaks Sachin-Sehwag partnership record
ஒருநாள் உலகக்கோப்பையில் பார்ட்னர்ஷிப்பில் அதிகமுறை 50+ ஸ்கோர்கள் எடுத்த வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் 971 ரன்களை 20 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி 19 இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை முறியடித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் ஜோடி 20 இன்னிங்ஸ்களில் 1,220 ரன்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பையில் பார்ட்னர்ஷிப்பில் அதிகமுறை 50+ ஸ்கோர் எடுத்த ஜோடியில், இந்த போட்டியுடன் சேர்த்து 8 முறை இந்த இலக்கை எட்டி சேவாக் மற்றும் சச்சின் ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளனர்.
ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் ஜோடி 12 முறை இந்த இலக்கை எட்டி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.