BANvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது வங்கதேசம்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 246 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்த நிலையில், வங்கதேசம் பேட்டிங்கில் களமிறங்கியது.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் போட்டியின் முதல் பந்திலேயே டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தன்சித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் ஓரளவு நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்தாலும், தன்சித் 16 ரன்களிலும், மெஹிதி 30 ரன்களிலும் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து நஜ்மல் ஹுசைன் 7 ரன்களில் வெளியேற 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
New Zealand need 246 runs to win
ஷகிப் அல் ஹசன் - முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சிறப்பான பேட்டிங்
வங்கதேச கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஷகிப் அல் ஹசன் 40 ரன்களில் அவுட்டான நிலையில், முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் கடந்து 66 ரன்கள் சேர்த்தார்.
இவர்களைத் தொடர்ந்து மஹ்முதுல்லா கடைசி வரை அவுட்டாகாமல் 41 ரன்கள் சேர்த்த நிலையில், வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் மற்றும் மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.