ஆசிய கோப்பை BANvsAFG : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு
இன்று (செப்டம்பர் 3) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- வங்கதேசம் : முகமது நைம், மெஹிடி ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், ஷமீம் ஹோசைன், அஃபீப் ஹோசைன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத். ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, நஜிபுல்லா ஸாத்ரான், முகமது நபி, குல்பதின் நைப், கரிம் ஜேனட், ரஷித் கான், பஸாலாக் பரூக்கி, மூஜீப் உர் ரஹ்மான்.