BAN vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 43வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
வங்கதேச அணியின் சார்பில் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 11 ஓவர்கள் வரை விக்ரெட்டுகளை இழக்காமல் 76 ரன்களைக் குவித்திருந்தனர் இருவரும்.
இன்றைக்கு களமிறங்கிய வங்கதேச பேட்டர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 20 ரன்களுக்கு மேல் குவித்த பிறகே ஆட்டமிழந்தனர்.
வங்கதேச பேட்டர்கள் அனைவருமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இடையிடையே சில விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச கிரிக்கெட் அணி.
ஒருநாள் உலகக்கோப்பை
300 ரன்களுக்கு மேல் குவிப்பு:
வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹோசனை ஷாண்டே மற்றும் தௌஹித் ஹிரிதாய் ஆகிய இருவரும் நிதானமாகவும் விக்கெட்டுகளை இழக்காமலும் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
வங்கதேச அணியின் பேட்டர்கள் யாருமே அதிரடியாக ஆட முற்படவில்லை. அனைவருமே 100 மற்றும் அதனையொட்டிய ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஒருநாள் போட்டிக்கு ஏற்றவாரு களம் கண்டனர்.
அதிகபட்சமாக தௌஹித் ஹிரிதாயின் 74 ரன்களுடன், அனைவரது பங்களிப்பும் இணைந்து 300 ரன்களுக்கு மேல் குவித்தது வங்கதேசம். ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா மற்றும் சீன் அபாட் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களைக் குவித்தது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவிற்கு 307 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.