LOADING...
14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி
14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி

14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2023
08:24 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (ஆகஸ்ட்30) முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர். பாபர் 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார். இப்திகார் 71 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இருவரும் சதம் அடித்ததோடு, ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இதற்கு முன்பு யூனிஸ் கான் மற்றும் உமர் அக்மல் ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக 176 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையாக இருந்த நிலையில், அதை தற்போது இருவரும் முறியடித்துள்ளனர்.

sixth highest partnarship in worldwide

சர்வதேச அளவில் ஆறாவது அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்

பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஜோடி பாகிஸ்தானுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, சர்வதேச அளவில் ஆறாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பட்டியலில் 2015இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 256 ரன்கள் குவித்த டேவிட் மில்லர் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் இயோன் மோர்கன், ரவி போபாரா (226 ரன்கள்), மூன்றாவது இடத்தில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா (224 ரன்கள்) உள்ளனர். இந்தியாவின் அசாருதீன் மற்றும் அஜய் ஜடேஜா 223 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் கிளார்க் 220 ரன்களுடன் உள்ளனர்.